Tuesday, February 17, 2009

மனசு தான் பேசுது...


நீ கூட இருந்தப்போ பூலோகமே கையில அடக்கிய மாதிரி இருந்தது...ஆனா இப்போ...எதுமே என் கையில் இல்ல...யாருமே என்ன புரிஞ்சிக்க மாட்டேங்கறாங்க...உண்மையிலயே சொல்றேன், யாரோ புரிஞ்சிக்காததில எனக்கு கவலையே இல்ல...ஆனா நீ...உன்னால ஏன் புரிஞ்சிக்க முடியல...அப்படி என்ன தப்பு பண்ணேன் நான்? ரொம்ப ரொம்ப வலிக்குதுடா...

உனக்கு தெரியாம நான் ஒரு மூச்சி கூட விட்டதில்ல, தெரியாது உனக்கு? காலையிலே கண்ணு முழிக்கிரதில இருந்து ராத்ரி கண்ணு மூடுறது வரைக்கும் உன்ன கேட்டு தான் செஞ்சேன்...நீ கவலைப்படக்கூடதுன்னு பொய் சொல்லியிருக்கேன்...நீ வருதப்படக்கூடதுனு சந்தோஷமா இருக்குற மாதிரி நடிச்சேன்...அதெல்லாம் இவ்வளவு பெரிய தப்பா மாறும் ன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல...நாம சேர்ந்து போன எல்லா கோயில் லேயும் கடவுள் சத்யமா சொல்றேன், தெரிஞ்சு நான் உனக்கு எந்த விதத்திலேயும் துரோகம் பண்ணல...

ஒரு லட்டு பார்த்தா, ஆப்பிள் பார்த்தா, பீச் க்கு போன, பைக் லே ஏறினா, ஒரு ஹோட்டல் க்கு போனா, ஒரு மெட்டி பார்த்தா...உன் ஞாபகம் தான் வருது...உன் முகம் தான் தெரியுது...நீ பக்கத்திலயே இருக்குற மாதிரி தான் தோணுது...ஆனா நீ...நான் சொல்ற எதையும் கேக்ற அளவுக்கு கூட உனக்கு பொறுமை இல்ல ல? இப்படி என் மேல வெறுப்பு காட்டுற அளவுக்கு நான் என்ன தப்பு பண்ணேன்?

என்ன நீ புரிஞ்சிக்கிட்ட அளவுக்கு வேற யாரும் புரிஞ்சிருக்க மாட்டாங்க...நீ என்ன விரும்பிய அளவுக்கு வேற யாரும் விரும்பியிருக்க மாட்டாங்க...நீ யோசிச்ச அத்தன வாட்டி வேற யாரும் என்ன பத்தி யோசிச்சிருக்க மாட்டாங்க...ஆனா இப்போ...? இப்போ கூட எனக்கு உன்ன ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு...

தமிழையும் தமிழ் நாட்டையும் இந்த நாட்டு கலாசாரங்களையும் புடிக்க வச்சதும் நீ தான், இப்போ மறக்க வைக்றதும் நீ தான். நீ இனிமே என் வாழ்க்கைல இல்லன்றத ஏத்துக்க முடில... ஏதோ ஒரு எடத்துல இருந்து நீ என் சுவாசத்த கட்டுபடுத்துலன்னா மூச்சியே விட தேவை இல்லனு தோணுது...உன்ன இப்போ நான் மிஸ் பண்ற மாதிரி யாரும் யாரையும் மிஸ் பண்ணி இருக்க மாட்டாங்க... உன்ன நான் காதலிச்ச அளவுக்கு இந்த உலகத்தில் யாரும் யாரையும் காதலிச்சிருக்க மாட்டாங்க...

7 comments:

 1. തമിള്‍ പഠിക്ക തെരിയാത് :(

  ReplyDelete
 2. enakkum theriyaathu.... ethu malayalam blga elle tamil bloga ... unakkariville nange ellam mallusnn....

  peesaama malayalathile post poodu....

  manath thaan peesthu....
  kashtapettu vaayichatha.. sheriyalle....???

  pinagandatto... chumma paranjathaane....

  keep blogging...

  ReplyDelete
 3. அபி தான் பேசுது
  ================

  நீ கூட இருந்தப்போ கையில் இருந்த உலகம் யாரு திருடியாச்சு ? நான் எப்போவும் சொல்வேன்... உன் பொருளு உன்னோடே பொறுப்பு... ஆனா நீ புரிஞ்சிக்க மாட்டேன்க... !!

  எல்லாத்துக்கும் நான் தான் முடிவு சொல்லனுமா ? உனக்கு தனியே எதுவுமே செய்ய தெரியாதா ? நாம் சேர்ந்து போன எல்லா கோவில்லேயும் கடவுள்கிட்டே உனக்கு என் புதி கொடுக்கலஎன்னு நான் எத்தனை தடவை கேட்டேன் ?

  லட்டு, ஆப்பிள், பிச எல்லாம் சாப்பிட்டு சாப்பிட்டு இப்போ காசு எதுவுமே இல்லாத என் புறச் பார்த்தல் எனக்கு உன் ந்யபகம் தான் வருது. என்னம்மா இந்த 'மெட்டி' ? மடினீ படம் தானா ?

  தமிழேயும் தமிழில் இந்த கடிததேயும் படிக்க வெச்சது நீ தான்... இப்போ எழுத வெச்சதும் நீ தான்... எதோ ஒரு இடத்தில் இருந்து நீ என்னை இப்படி எல்லாம் செய்ய வேசிங்கே... இப்போ நீ திட்டின மாதிரி யாரும் யாரேயும் திட்டியிரிக்க மாட்டங்க...

  கடுவளே... என்ன கொடுமை இது !!

  ReplyDelete
 4. To Abhi: உங்கக்கிட்ட யாரு கேட்டா? உன்ன யாரும் முடிவெல்லாம் சொல்ல சொல்லல...நீங்க உங்க வேலைய மட்டும் பாருங்கோ...ஆமாம் நீங்க எப்ப எனக்கு செலவு பண்ணிங்க? உங்க பெர்சு காலியாசுன்னா அதுக்கு நான் பொறுப்பு இல்ல...பெர்சு ஓட்டையா இருந்திருக்கும்...அப்புறம் எங்க பொருள் எல்லாம் எங்களுக்கு பாத்துக்க தெரியும்...லட்டு , ஆப்பிள் பார்த்து உங்க ஞாபகம் வரல...அது புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சா போதும்...நீங்க கொஞ்சம் அமைதியா இருங்கோ...ஓம் சாந்தி ஓம்!

  ReplyDelete
 5. एंथोन्नेड़ी इथू? मलयालम ब्लॉग्गिल तमिलो? आदि वेनॉ सुमेची निनक्कु? ईनी मेलिल मलायालम ब्लॉग्गिल तमिल टाइप चेयतल आडि मेडीककुम नी..
  पीन्ने एन्थोक्के उंड़ू सुमेची विसेशम?

  ReplyDelete
 6. ആഹഹാ.. എന്താ രസം കാണാന്‍ .. അടിപൊളി.. ഈ മോഡേണ്‍ ആര്‍ട്ട് എവിടുന്നാ പടിച്ചേ...?? ആരോ കമന്റിട്ടിരിക്കുന്നത് കണ്ടു വായിക്കാന്‍ പറ്റുന്നില്ലാന്ന്.. പടങ്ങള്‍ എല്ലാം മനസ്സിലാക്കുകയല്ലേ വേണ്ടത് അല്ലേ..?? ഇനീം ഇതു പോലുള്ള പണികളൊക്കെ വീട്ടിലിരിപ്പുണ്ടോ..?? ഇതിന്നാണ് ഞാന്‍ കണ്ടത്.. സമ്മതിച്ചിരിക്കുന്നു കേട്ടോ...!!
  പിന്നെ ഒരു സ്വകാര്യം.. ആരു കാണാതെ ഇതിന്റെ അര്‍ത്ഥമൊന്നു പറഞു തരണം... കൂടെയുള്ള പടം കണ്ടീട്ട് എന്തോ മിട്ടായി തിന്ന കഥയാണെന്ന് തോന്നുന്നു..!!

  ReplyDelete
 7. നേരത്തെ തംഗ്ലീഷില്‍ വായിച്ചത് ഇതാണെന്നു, ഇതു വായിച്ചു തുടങ്ങിയപ്പോഴാ മനസ്സിലായത്..അതു കൊണ്ട് അത് വിട്ടു താഴേക്ക് വന്നു..അഭിക്ക് കൊടുത്ത മറുപടിയാണു ആദ്യം വായിച്ചത്.
  അയാളൊരു തമാശയായിരിക്കാം ഉദ്ദേശിച്ചിരിക്ക്വ.പിഴച്ചു പോയി.

  സമാനസാഹചര്യങ്ങള്‍ പരിചയിച്ചിട്ടുള്ളതോണ്ട് , പോസ്റ്റ് എഴുതിയ സമയത്തെ മനസ്സ് വായിക്കാം.

  റിക്കവര്‍ ചെയ്തുകാണുമെന്നു പ്രതീക്ഷിക്കുന്നു :)

  ReplyDelete